வில்லுக்கு விஜயன் மஹாபாரதம் ஒரு பெரும் காவியமாகும் இங்கு பரசுராமர், இந்திரன் முதலியவர்களையே குருவாக கொண்டவரும் யுத்தத்தில் பரசுராமரையே வென்றவருமான பெரும்பாட்டனார் பீஷ்மர் பரசுராமர், அகஸ்தியர், அக்னிவேசியர்,பிரகஸ்பதி என பலரிடமும் அஸ்திரங்கள் பெற்று குரு வம்சத்திற்கு குலகுருவான துரோணாச்சாரியார் கௌதம முனிவரின் வம்சத்தில் பிறந்த சரத்வானரை தனது தந்தையாகவும், குருவாகவும் கொண்டவரும் சிரஞ்சீவிகளில் ஒருவருமான கிருபாச்சாரியார் துரியோதனனின் உற்ற நண்பனும் பரசுராமரிடம் பிரம்மாஸ்திரத்தை பெற்றவனும், கௌந்தேயர்களில் மூத்தவனான கர்ணன் இவ்வாறு இக்காவியம் பல சிறந்த வீரர்களை கொண்டிருந்தாலும் வில்லுக்கு விஜயன் என்ற பெயர் இன்றும் பெரியோர்களால் எங்கும் சொல்லப்படுவதை பார்க்க முடிகிறது அத்தனை வீரர்களுக்கும் கிட்டாத இந்நிலை குறிப்பாக விஜயனுக்கு கிட்டியது இது சரிதானா இல்லை தவறா என பலரின் உள்ளும் இன்றும் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது அவ்வகையில் எதற்காக பார்த்தன் அவ்வாறு அழைக்கப்படுகிறான் முன்ஜென்மத்தில் நரனென்னும் ரிஷியாக இருந்தவன் அடுத்த பிறவியில் அர்ஜுனனாக அவதரித்தான் கிருஷ்ணனின் பிறப்பிற்கு ...
Posts
Showing posts from October, 2017
- Get link
- X
- Other Apps
👑 நர - நாராயணர்கள் ( முழுநீள பதிவு நேரம் ஒதுக்கி படிக்கவும் ) 👑 மஹாபாரதத்தின் முதல் மற்றும் ஒவ்வொரு பர்வத்தின் தொடக்கத்திலும் இவர்களை வணங்கியே மஹாபாரதம் இன்றும் படிக்கப்படுகிறது 🌼 பாகவதம் இவர்களை தர்மதேவதைக்கும் தட்ச பிராஜாதிபதியின் மகளான மூர்த்திக்கும் பிறந்த மகாவிஷ்ணுவின் இரட்டை அவதாரம் என்று கூறுகிறது [1] மகாபாரதத்தில் நாராயணர் மட்டுமே தர்மதேவதைக்கு பிறந்தார் எனவும் நாராயணரின் தபோ பலத்தால் நரன் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது [2] 🌹 ஐயக்ரீவர் என்றும் வேதம் ஒதும் இடமும் சிருஷ்டியில் என்றும் அழியாததுமான பத்ரிகாஸ்ரமமே இவர்களின் இருப்பிடம் 🌹 ஒவ்வொரு யுகமும் உலக காரியங்களுக்காக நர-நாராயணர்கள் பூமியில் அவதரிக்கின்றனர் (2) 🌹 பழங்காலத்தின் தெய்வங்கள் இவர்களை யுத்தத்தில் தேவர்கள், அசுரர்கள், தானவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் இணைந்து வந்தாலும் வெல்லமுடியாதவர்கள் தேவர்களில் இருந்து கந்தவர்கள், அசுரர்கள், யட்சர்கள், நாகர்கள், மனிதர்கள் என அனைவராலும் வணங்கப்பட வேண்டியவர்கள் (14) 🌹 தங்களின் தவம் மூலமாக உயர்நிலையை இவர்கள் அடைந்தனர் பிரளயத்தின்போது கூ...