நர - நாராயணர்கள்

மஹாபாரதத்தின் முதல் மற்றும் ஒவ்வொரு பர்வத்தின் தொடக்கத்திலும் இவர்களை வணங்கியே மஹாபாரதம் இன்றும் படிக்கப்படுகிறது

பாகவதம் இவர்களை தர்மதேவதைக்கும் தட்ச பிராஜாதிபதியின் மகளான மூர்த்திக்கும் பிறந்த மகாவிஷ்ணுவின் இரட்டை அவதாரம் என்று கூறுகிறது [1] மகாபாரதத்தில் நாராயணர் மட்டுமே தர்மதேவதைக்கு பிறந்தார் எனவும் நாராயணரின் தபோ பலத்தால் நரன் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது [2]

ஐயக்ரீவர் என்றும் வேதம் ஒதும் இடமும் சிருஷ்டியில் என்றும் அழியாததுமான பத்ரிகாஸ்ரமமே இவர்களின் இருப்பிடம்

ஒவ்வொரு யுகமும் உலக காரியங்களுக்காக நர-நாராயணர்கள் பூமியில் அவதரிக்கின்றனர் (2)

பழங்காலத்தின் தெய்வங்கள் இவர்களை யுத்தத்தில் தேவர்கள், அசுரர்கள், தானவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் இணைந்து வந்தாலும்   வெல்லமுடியாதவர்கள் தேவர்களில் இருந்து கந்தவர்கள், அசுரர்கள், யட்சர்கள், நாகர்கள், மனிதர்கள் என அனைவராலும் வணங்கப்பட வேண்டியவர்கள் (14)

தங்களின் தவம் மூலமாக உயர்நிலையை இவர்கள் அடைந்தனர் பிரளயத்தின்போது கூட இவர்கள் அழியமாட்டார்கள்
இந்திரன் முதலிய தேவர்களுக்கு ஒரு மன்வந்திரமே வாழ்வு
சிரஞ்சீவிற்கு கூட ஒரு கல்ப காலமே வாழ்வாகும்
ஆனால் நர-நாராயணர்கள் பத்ரி ஆஸ்ரமத்தில் பிரம்மாவை போன்று அழியாத நித்ய வாழ்வு கொண்டு இன்றும் அகில நன்மைக்காக தவம்புரிகின்றனர்[3]

தவம்புரியும் ரிஷிகளின் சக்தி ஒப்பற்றதாகும் இந்த சக்தியை ஆதாரமாக கொண்டு சிருஷ்டியை இயக்க அவதரித்தவர்களே நர-நாராயணர்கள்

பாற்கடல் கடைந்து அமிர்தம் வெளிப்பட்டபோது நடந்த தேவாசுர போரில் அசுரர்களில் பெரும்பான்மையினரை வதைத்தவர்கள் நர-நாராயணர்களே
பிறகு இந்திரன் அமிர்தத்தை காக்கும்பொருட்டு அதை நரரிடம் தருகிறார் (4)

இருவரும் ஈருடலில் இருக்கும் ஓர் ஆன்மாவாவர் (5,6)

தவத்தை கலைக்க மன்மதன் உட்பட பல அப்சரஸ்கள் உடன்செல்ல தனது தொடையில் தட்டி ஊர்வசி எனும் அப்சரஸை உருவாக்கியவர்கள் அப்சரஸ்களே ஊர்வசியை கண்டு மயங்கினர் என்பதே உண்மை ஊர்வசி நடந்துசெல்கையில் அவள்பின்னே அனைத்து அப்சரஸ்கள் உட்பட மன்மதனே பின்னே செல்லும் அழகை உடையவள் ஊர்வசி (15)

பிரகலாதனுக்கு அருள்புரிந்த கதை (வாமன புராணம்) [7]
      உலகில் சிறந்த தீர்த்தம் எதுவென பிரகலாதன் கேட்கையில் நைமிசாரண்யமே சிறந்தது என அறிய அங்கு நீராட செல்கிறார் அங்கு அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது
      அங்கு ஒரு மரத்தில் எள் அளவு கூட இடைவெளியில்லாமல் அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தது ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான அம்புகள் குத்திநின்ற காட்சி அவரை திகைப்பிற்கு உள்ளாக்கியது இதை கண்டு யாரென தேடுகையில் நர நாராயணர்கள் நிறைந்த அம்பறாத்தூணியுடனும் திவ்ய தனுசுடனும் தவம்புரியும் காட்சியை கண்டார்

அவரின் பார்வையில் அவர்கள் வில்லுடன் இருந்ததால் போலித்துறவிகளாக தெரிந்தனர் தவம்செய்யும் முனிவர்கள் அனைத்தையும் துறந்தவர்கள் அவர்களுக்கு ஏன் ஆயுதமென எண்ணினார் இதனால் நர - நாராயணர்களிடம் கேட்க இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தை யுத்தமாகியது

முதலில் நரனுடன் யுத்தம் தொடங்குகிறது
பிரகலாதன் ஏவும் அனைத்து பாணங்களும் நரனின் பாணத்தால் செயலற்றதாகின்றன இதை கண்ட பிரகலாதன் இவர்கள் சாமான்யர் இல்லை என்பதால் பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்கிறார் நரன் இதை நாராயண அஸ்திரம் கொண்டு எளிதாக தடுக்கிறார்

இதை அடுத்து சக்தி வாய்ந்த ஆக்நேயத்தை பிரகலாதன் விட ஈசனின் நெற்றிக்கண்ணின் சக்திகொண்ட மஹேஸ்வர அஸ்திரத்தை கொண்டு தடுக்கிறார் அச்சமயத்தில் சூரியன் அஸ்தமனமாக நரன் யுத்தத்தை நிறுத்துகிறார்

அடுத்த நாள் யுத்தம் தொடங்க தற்போது நாராயணர் யுத்தகளம் வர யுத்தம் தொடங்குகிறது பாணங்கள் பயனற்று போக தனது கதாயுதத்தை எடுத்து நாராயணரின் தலையில் அடிக்க அது சுக்குநூறாகிறது

இதுகண்டு அதிர்ச்சியடைந்த பிரகலாதன் பகவான் விஷ்ணுவை தியானிக்கிறார் பக்தியின் தூண்டுதலால் அங்குதோன்றிய பரந்தாமனிடம் என்னால் ஏன் இவர்களை வெல்லமுடியவில்லை எனக்கேட்க
" இவர்களை என் அம்சமென்றறிவாய் அவர்களை யுத்தத்தில் வெல்லமுடியாது பக்தியினால் மட்டுமே வெல்ல முடியும் " எனக்கூறுகிறார்

இதைகேட்ட பிரகலாதன் ஆட்சியின் பொறுப்பை அந்தகனிடம் ஒப்படைத்துவிட்டு துறவியை காட்டிற்கு வந்து பிரார்த்திக்கிறார் இதனால் மகிழ்ந்த அவர்கள் தோன்ற " தான் அவர்களை ஏசியதையும் யுத்தம் செய்ததையும் பொறுத்தருள வேண்ட அவர்கள் அவ்வாறே ஏற்று வரம் வேண்ட கூற உங்ளையும் மகாவிஷ்ணுவையும் எக்காலத்திலும் மறவா வரம் கேட்கிறார்

அரசனை காணாது அந்தகன் காடு வந்து மீண்டும் அரசாள வேண்ட அதை மறுக்கும் பிரகலாதன் எனக்கு எதுவும் வேண்டாமென இராஜ்யத்தை அந்தகனிடம் அளித்துவிட்டு வனம்செல்கிறார்

ஈசனின் திருவிளையாடல் (8)
              தட்ச பிராஜாதிபதியின் யாகம் நடந்த இடத்தையே அழித்த பின் ஈசனின் திரிசூலம் பத்ரிகாஸ்ரமம் நோக்கி வருகிறது
              நாராயணரின் மார்பில் திரிசூலம் தாக்க அதை தவவலிமை கொண்டு தடுத்த நாராயணர் மறுபடியும் ஈசனின் கைக்கே திருப்புகிறார் இதனால் நாராயணரை நோக்கி ஈசன் வர படபடப்பாக வந்த ஈசனின் கழுத்தை பிடிக்கிறார் இதனால் அவர் கழுத்து நிறம் மாறுகிறது
              இதனால் நரர் தர்ப்பையை எடுத்து அதை கோடாலியாக்கி ஈசனின் மேல் விட அது சுக்குநூறாகிறது இதனால் ஈசனுக்கு கண்டபரசு என்ற பெயர் உண்டு
              இந்த யுத்தத்தால் பிரபஞ்சமே நடுங்க பிரம்மதேவர் தோன்றி இருவரையும் தடுக்கிறார் இந்த சண்டை தவத்தின் சக்தியை காட்ட நிகழ்ந்ததாக கருதப்படுகிறது
              ஈசனின் திரிசூலம் தாக்கியதால் நாராயணரின் மார்பில் ஸ்ரீ வத்சம் என்ற மச்சமும்
              நாராயணரின் கையால் பிடிக்கப்பட்டதால் ஈசனின் கழுத்தின் நிறம் மாறியது இவ்வாறு இருவரும் தங்களுக்குள் அடையாளத்தை உண்டு பண்ணிகொண்டனர்
              மகாதேவனான ஈசனை பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் நர - நாராயணர்களை தவிர தேவர்களாலோ, சித்தர்களாலோ, கந்தர்வர்களாலோ கூட அவ்வளவு எளிதாக காணமுடியாது இவர்கள் நால்வர் மட்டுமே ஈசனை எளிதில் காணக்கூடியவர்களாக உள்ளனர் (9)

பாசுபதம் தரும்போது கூட ஈசன் அர்ஜுனனின் முன்ஜென்மத்தை பற்றி தெளிவாக உரைக்கிறார் உன்னால் நான் யுத்தத்தில் திருப்தி செய்யப்பட்டேன் என ஈசனே கூறுவார் மேலும் அர்ஜுனனின் தவத்தை மெச்சி வாரியணைப்பார் (17)

இதனால் ஈசனே ஜயத்ரதனுக்கு வரம்அளிக்கும்போது அர்ஜுனன் தவிர்த்து மற்ற நால்வரை உன்னால் தடுக்க முடியும் என்றே கூறி வரம் அளித்தார் (10)

மூவுலகிலும் இவர்களுக்கு இணையானவர்கள் இல்லை அண்டத்தின் இயக்கத்தில் பெரும்பங்கு கொண்டவர்கள் பழமையிலும் பழமையானவர்கள் முனிவர்களில் சிரேஷ்டர்கள் நர-நாராயணர்களை ஆட்சி செய்பவர் எவரும் இல்லை அவர்களே அனைத்தையும் ஆட்சிசெய்கிறார்கள் இவர்களின் கோபம் பேரழிவை தரவல்லது (13)

ஈசன் சர்வத்தையும் நாசம்செய்யவல்ல பாசுபதத்தை நர-நாராயணர்கள் மீது விட அவர்கள் தங்களின் தவபலத்தால் தன்னுள் அடக்கியதாகவும் விக்கிபீடியா முதலிய பலவற்றில் கூறப்பட்டாலும் நான் தேடியவரை அதற்கான ஆதாரம் கிட்டவில்லை

நாரதருக்கு உபதேசம்

நாரதருக்கு மகாவிஷ்ணுவை காணும் வழியை எடுத்துரைத்தவர்கள் நர-நாராயணர்களே இதனால் தரிசனம் கிட்டியவுடன் நாரதர் வந்தது நர நாராயணர்களிடமே அங்கு அவருக்கு ஞானோபதேசம் வழங்கப்பட்டது ஆயிரம் வருடங்கள் அங்கு இருந்த பின்னே அவர் அவருடைய ஆஸ்ரமம் சென்றார்

தம்போத்பவனின் செருக்கை அடக்குதல் (11)

தம்போத்பவன் எனும் அரக்கன் உலகில் அனைத்து அரசர்களையும் வென்று தனக்கு நிகரானவன் இல்லை என இருமாந்து இருந்தான்

ஒரு முறை ஒரு பிராமணனிடம் தம்போத்பவன் தன்னைவிட சிறந்தவர் உண்டோ எனகேட்க பிராமணன் நர - நாராயணர்களை விட சிறந்தவர்கள் இல்லை எனக்கூற தம்போத்பவன் தன் படையுடன் அவர்கள் ஆஸ்ரமம் சென்று அவர்களை யுத்தத்திற்கு அழைக்கிறான்

நர-நாராயணர்கள் எவ்வளவு மறுத்தும் தம்போத்பவன் விடுவதாக இல்லை இதனால் நரன் கைநிறைய புற்கூச்சிகளை எல்லாம் சேர்த்துவைத்து கொண்டு தம்போத்பவனை யுத்தத்திற்கு அழைக்கிறார் தம்போத்பவன் தனது ஆறுவகை படைகளுடன் நரனை வீழ்த்த விரைகிறார்

ஆனால் நரனிடம் அது பலிக்கவில்லை நரனின் புற்குச்சிகள் படையை நாசம்செய்ததோடல்லாமல் தம்போத்பவனையும் வீழ்த்தியது இதனால் தம்போத்பவன் நரனின் பாதத்தில் விழ அவர் அறிவுரை கூறி அனுப்பிவைக்கிறார்

புவியில் அவதரித்த நர - நாராயணர்கள் (12)
          ஒருமுறை பிரம்மதேவரை தரிசிக்க பிரகஸ்பதி மற்றும் சுக்ராச்சாரியர் மற்றும் இந்திரன் முதலிய தேவர்கள் அனைவரும் செல்கையில் அந்த இடத்தில் அனைவரின் சக்தியையும் இழுப்பது போல் தேஜசுடன் நர - நாராயணர்கள் அந்த இடத்தை விட்டு சென்றனர்
          இதைகண்ட தேவர்களின் குருவானவர் பிரம்மதேவரிடம் தங்களை வணங்காமல் இங்கிருந்து செல்லும் இவர்கள் யாரென கேட்க அதற்கு பரமபிதா தவத்தகுதியுடையவர்களும், தங்கள் பேரொளி மற்றும் அழகால் சுடர்விட்டு, பூமி, சொர்க்கம் ஆகிய இரண்டுக்கும் ஒளியூட்டுபவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், அனைத்திலும் ஊடுருவி, அனைத்தையும் கடந்திருப்பவர்களுமான இந்த இருவரும், வேறு உலகத்தில் இருந்து வந்து, தற்போது இங்கே வசித்து வரும் நரனும், நாராயணனும் ஆவார்கள். பெரும் வலிமையும் ஆற்றலும் உடைய அவர்கள், தங்கள் சொந்த தவத்தின் விளைவால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள் அசுரர்களின் அழிவுக்காகவே இவர்கள் நிலைத்திருக்கிறார்கள் எனக்கூறுகிறார்
          இதைகேட்ட இந்திரன் பிரகஸ்பதி உடன்சென்று நர-நாராயணர்களிடம் அசுரர்களின் அழிவை வரமாக கேட்கிறான்
          நர-நாராயணர்கள் அவ்வாறே வரம் அளிக்கின்றார்கள் அவ்வாறே வாசுதேவன் எண்ணற்ற அசுரர்களை வேரறுக்கிறார் அர்ஜுனன் நிவாதகசர்கள் காலகேயர்கள் மற்றும் பூமியில் அவதரித்த அசுரர்களையும் வீழ்த்தினார்
          பூதேவியின் பாரம்குறைக்க கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்ததுவே அவ்வாறே பல வரங்களால் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதே

பத்ரிகாஸ்ரமம் (16)
            இன்றைய பத்ரிநாத் கோவிலே பத்ரியாஸ்ரமம் ஆகும் இங்கே இன்றும் நர-நாராயணர்கள் தவம்செய்வதாக நம்பப்படுகிறது
            வைஷ்ணவத்தில் இத்தலம் வைகுண்டமாக கருதப்படுகிறது வாழ்நாளில் ஒருமுறையேனும் வரவேண்டும் என நினைக்கும் ஸ்தலம்
            ஸ்காந்த புராணத்தின்படி பத்ரிகாஸ்ரமம் சொல்லமுடியாத அளவு பெருமை உடையது சத்ய யுகத்தில் இங்கு வந்தாலே இறைவனை காணலாம்
            சாலக்கிரமத்தினால் பிரம்மா உருவாக்கிய சிலையே மூலவராவர்
            மூலவருக்கு இடது பக்கத்தில் நின்ற கோலத்தில் நர-நாராயணர்கள் அங்கு காட்சி தருகின்றனர்
            இமயத்தில் உள்ள பத்ரிகாஸ்ரமமே நரன் மலை மற்றும் நாராயணர் மலை என்றழைக்கப்படும் இரு பனிசூழ்ந்த மலைகளுக்கு நடுவில் தான் உள்ளது
            நரன் மலை அரிய பொக்கிஷங்கள் நிறைந்ததால் குபேர மலையெனவும் அழைக்கப்படுகிறது
            இன்றளவும் நர-நாராயணர்கள் சிருஷ்டி நலனுக்காக இங்கே தவம்புரிவதாக ஐதீகம் கலியுகத்தில் இவர்களை காண்பது இயலாது
            பிரம்மாவின் கூற்றுப்படி இவர்கள் வேறு இடத்தில் இருந்தனர் ஆனால் பூலோகத்திற்கு வரவேண்டிய அவசியம் இருந்ததால் புனிதமான இடமான பத்ரிகாஸ்ரமத்தை அமைத்தனர்
            இங்கு தான் வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் மஹாபாரதத்தை எழுதிய இடமும் உள்ளது
            மேலும் பாண்டவர்கள் அவதரித்த இடமும் இங்கே தான் மேலும் சொர்க்கம் சென்றது இவ்வழியில் தான்
         
மேற்கூறியவை ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் கீழ் தரப்பட்டுள்ளன
A = கும்பகோண பதிப்பு
B = கங்குலி மொழிப்பெயர்ப்பு
C = Bori critical edition (சமஸ்கிருதம்)

1.
http://bhagavata.org/canto11/chapter4.html

2.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZWk1tOUZKN3UtREk/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2016/12/Mahabharatha-Drona-Parva-Section-202.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs07172.htm

3.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZUmdxNTRqV3pJNUk/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section97.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05095.htm

4.
A.
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZeW9lZktuZ1BrYWs/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section19.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs01017.htm

5.
A.
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZYXNKNU41S3R5ems/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section49.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05048.htm

6.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZYXNKNU41S3R5ems/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2013/11/Mahabharatha-Vanaparva-Section12b.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs03013.htm


7.
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZV2JmRE9HQ1lZeXM/view?usp=drivesdk


https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZckNYSHFzSlgzZEk/view?usp=drivesdk

8.
A:
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZMXNiYmxCVC1HbVE/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZQ0ppSjJmdmg5SnM/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZU2JSUEJYeTFBSGM/view?usp=drivesdk

B.
http://www.sacred-texts.com/hin/m12/m12c042.htm#fn_293

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs12330.htm


9.
B.
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section111.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05109.htm

10.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6Zd1lKZ1ByQVhsWU0/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section270.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs03256.htm

11.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZNksxRWFPZzIzTVU/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section96.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05094.htm

12.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZUWxoTVhjS1FSOEU/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZVlMzMjFFSWxXa2M/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section49.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05048.htm

13
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZZE9sNnZZdzIzMVk/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-87.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs08063.htm

14
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZeWlDNmtQWWFwaDg/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Adiparva-Section230.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs01219.htm

15
https://books.google.co.in/books?id=UDCMCgAAQBAJ&pg=PT325&lpg=PT325&dq=urvashi+birth+bhagavata&source=bl&ots=87RQyWKrQI&sig=7sMtxFfAgFyf9e6Xi87hzjWrp0I&hl=ta&sa=X&ved=0ahUKEwiv_b26yY3WAhVBUbwKHYCXDR44ChDoAQgfMAI#v=onepage&q=urvashi%20birth%20bhagavata&f=false

16
http://www.thesacredjourneys.com/badrinath/

17
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZZlJzMllZOURlY2c/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section40.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs03041.htm

Comments

Popular posts from this blog